Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 12 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
நம்பிக்கை மோசடி செய்து நகைகளை விற்ற கூவில் கீரிமலை பகுதியினை சேர்ந்த 27 வயதுடைய பெண்ணை, நேற்று புதன்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
திருமண வீடு, ஏனைய வைபவங்களுக்கு அணிந்து விட்டுத் தருவதாகக் கூறி, அயல் வீடுகள் இரண்டில் கடந்த 7ஆம் திகதி நகைகளை குறித்த பெண் வாங்கியுள்ளார்.
வாங்கிய நகைகளை உரிமையாளர்களிடம் மீளவும் வழங்காமல் ஏமாற்றி வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த பெண்ணை, நேற்று பொலிஸ் கைது செய்துள்ளனர்.
இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் வாங்கிய நகைகளை யாழ்ப்பாணத்தில் உள்ள நகை கடை ஒன்றில் அடகு வைத்து அதன் மூலம் பெற்ற பணத்தை கணவரின் மதுபான செலவுக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago