Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
யாழ் போதனா வைத்தியசாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இருதயசத்திர சிகிச்சை பிரிவுக்கு போதுமான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஒரு வருடத்தில் போதுமான வளங்கள் இல்லாத நிலையிலும் 72 பேருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இன்னமும் 985 பேருக்கு இச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளில் மூன்று வைத்தியசாலைகளிலேயே இருதய சத்திர சிகிச்சை இருந்து வந்துள்ளது. அங்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இங்கு அந்த வசதிகள் இல்லாதவிடத்தும் நான்காவது வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலையிலும் இப் பிரிவை ஆரம்பித்திருக்கின்றோம்.
அவ்வாறு குறைந்தளவிலான வசதிகளைக் கொண்டு ஆரம்பித்து இயங்கி வந்தாலும் நிறைவான சேவைகளையே வழங்கி வருகின்றோம்.
யாழ் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப்பிரிவில் இது வரையில் 985 பேர் பதிவுகளைச் செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கான சிகிச்சைகளை உடனடியாகச் செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைமையும் இருக்கின்றது. ஏனெனில் ஒரு வாரத்தில் இரண்டு சிகிச்சைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
46 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
9 hours ago