2025 மே 05, திங்கட்கிழமை

’இருதய சிகிச்சைகள் விக்டோரியா வீதியில் இடம்பெறும்’

Niroshini   / 2020 நவம்பர் 15 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இருதய  சிகிச்சைக்குரிய சிகிச்சைகள், நாளை திங்கட்கிழமை முதல் விக்டோரியா வீதியில் அமைந்துள்ள  சிகிச்சை நிலையத்தில் நடைபெறவுள்ளதாக, யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன், மகப்போற்று பெண் நோயியில் சிகிச்சைப் பிரிவும் மீண்டும் பழைய இடத்துக்கு நாளை முதல் மாற்றப்பட்டு இயங்கவுள்ளதாகவும், அவர் கூறினார்.

எனவே நோயாளிகள் அங்கு நேரடியாக வந்து, வைத்திய ஆலோசனைகளைப் பெற்று மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாமென, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X