2025 மே 19, திங்கட்கிழமை

இருவேறு விபத்து சம்பவங்களில் படுகாயமடைந்த இருவர் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருவேறு விபத்து சம்பவங்களில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை (18) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த வவுனியா மதகு வைத்த குளத்தை சேர்ந்த சிவராசா தினேஷ்கரன் (வயது 26) எனும் இளைஞன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (19) சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

அதேவேளை அம்புலன்ஸ் வண்டி மோதி விபத்துக்கு உள்ளான கிளிநொச்சி பரந்தனை சேர்ந்த ரவீந்திரகுமார் தரணிகா (வயது 08) எனும் மாணவி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

கிளிநொச்சி விவேகானந்தா ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த மாணவி கடந்த 11ஆம் திகதி பாடசாலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது வீதியை கடக்க முற்பட்ட வேளை அம்புலன்ஸ் வண்டி மோதி விபத்துக்கு உள்ளானார்.

விபத்துக்கு உள்ளான மாணவி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.  அந்நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X