2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள காணிகளை விடுவிக்க வேண்டும்

Sudharshini   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தனியார் காணிகளை விடுவிக்க வேண்டும் என ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை (27) இடம்பெற்றது.

கிளிநொச்சியில் உள்ள 203 ஏக்கர் கரும்புத் தோட்ட காணியில் ஒரு பகுதியை வயற் செய்கைக்காக இராணுவத்தினர் விடுவித்திருந்தாலும் குறித்த நிலத்தில் நெற்செய்கை செய்வதற்கான குத்தகையை இராணுவத்தினரே எடுத்துள்ளனர்.

இதேவேளை வட்டக்கச்சியிலுள்ள ஒருங்கிணைந்த விவசாய பண்ணையில் 60 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.  

இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இத்தீர்மானத்தை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட இணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்மொழிந்தார். ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட இணைத் தலைவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை வழிமொழிந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X