2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இராணுவத்தினர் திடீர் சோதனை: அச்சத்தில் மண்டைக்கல்லாறு மக்கள்

George   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் (ஏ -32 வீதி) பூநகரி, மண்டைக்கல்லாறு பகுதியில் இராணுவத்தினர் விசேட சோதனை நடவடிக்கையை இன்று வெள்ளிக்கிழமை (26) காலை மேற்கொண்டனர்.

பஸ்கள் தவிர்ந்து ஏனைய வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதுடன் அதில் பயணித்தவர்கள் உடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, ஆள் அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டதுடன், அவர்களின் உடமைகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

சோதனை இடம்பெற்ற இடத்துக்குச் சற்றுத்தொலையில் இராணுவத்தினர் சிலர் பயிற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

நீண்டகாலத்துக்கு பின்னர் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X