2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இராணுவ காவலரணுக்கு முன் கைவரிசை

Gavitha   / 2015 நவம்பர் 01 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

காங்கேசன்துறை இராணுவ காவலரணுக்கு முன் நிறுத்தி விட்டு, பணிக்காக உள்ளே சென்ற தமிழ் இராணுவ உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள், திருட்டு போயுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார், நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்தனர்.

காங்கேசன்துறை ஹரிசன் படைமுகாமில் கடமையாற்றும் பண்டத்தரிப்பு பகுதியினைச் சேர்ந்த குறித்த இராணுவ சிப்பாய், வியாழக்கிழமை (29) காலை வழமை போல இராணுவ காவலரனின் முன் நிறுத்தி விட்டு, பணிக்கு உள்ளே சென்றுள்ளார்.

மாலை திரும்பி வந்து பார்த்த போது, நிறுத்தி வைக்கப்பட்ட வைக்கப்பட்ட இடத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் காணாமல் போயுள்ளது.

இவ்வாறு காணாமல் போன மோட்டார் சைக்கிளின் பெறுமதி 190,000ஆயிரம் ரூபாய் என பொலிஸார் கூறினர். திருட்டு போனமை தொடர்பில் அவ் உத்தியோகத்தர், சனிக்கிழமை (31) காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .