2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

இறங்கு துறையினை மீட்டுத்தருமாறு கோரிக்கை

Editorial   / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

படையினர் கைப்பற்றியுள்ள பூர்வீக இறங்கு துறையினை மீட்டுத்தருமாறு முள்ளிவாய்க்கால் மேற்கு வளர்மதி கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் மக்களின் தொழில் செய்யும் இறங்கு துறைகள் அனைத்தும் படையினர் வசம் இருந்ததுடன்,பின்னர் மக்கள் பல போராட்டங்களை நடத்தியதன் விளைவாக 50 மீற்றர் தூரமான கரையோர பகுதி விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில் 50 மீற்றர் தூரத்தில் 50 கடற்தொழிலாளர்களின் படகுகளை எவ்வாறு தரித்து வைக்க முடியும் என மீனவர்கள் கேள்வியெழுப்பினர்.

இந்த விடயம் தொடர்பில் வடமாகாண சபைஉறுப்பினர் து.ரவிகரனுக்கு மீனவர்கள்  கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதுடன் நேற்று (26)ரவிகரன்  குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பில் வடமாகாண சபைஉறுப்பினர் து.ரவிகரன் மாகாணசபை அமர்பில் முதலமைச்சரிடம் மக்களின் கோரிக்கையினை முன்வைக்கவுள்ளதாகவும், ஒருங்கிணைப்பு குழுகூட்டத்திலும் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .