Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
இறுக்கமான விதிமுறைகளை அமுல்படுத்தாவிட்டால், ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது பயனற்றதாகிவிடும் என்று, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
இதனால், ஊரடங்குச் சட்ட விதிமுறைகளைத் தீவிரமாக அமுல்படுத்துவதை, வடக்கு மாகாண ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டுமென்றும் இது சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட தரப்பினலுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரியும், ஊரடங்கு நேரத்தில் மாவட்ட எல்லைகளைத் தாண்டிப் பயணிக்க 300க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரு நாளில் சான்றிதழ்களை வழங்குவதாகவும் அவை அத்தியாவசிய சேவைகளுக்குரித்தான அரசாங்க உத்தியோகத்தர்களுக்கானவை அல்லவென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“பெரும்பாலானவர்கள், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதாக கூறுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் மொத்தம் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் காணப்படுகின்றன. இவற்றினூடாக, மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர், மாவட்ட எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
“சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2 ஆயிரம் நபர்கள் தவிர மற்றவர்கள் அனைவருக்கும், பிரதேச செயலகத்தின் கடிதம் காரணமாக சுகாதார வைத்திய அதிகாரிகளால், ஊரடங்குச் சட்ட அனுமதிச் சான்றிதழை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
“இதனைத் சரியானை முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும். அரசாங்க அதிபர் மற்றும் மாகாண சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் இருவரும் இணைந்து, இதனைக் கட்டுப்படுத்தத் தேவையான ஒழுங்குமுறையை ஏற்படுத்த வேண்டும்.
“சம்பந்தப்பட்ட தரப்பினரை, இறுக்கமான விதிமுறைகளை அமுல்படுத்துவதை வடமாகாண ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு கட்டுப்படுத்தாதவிடத்து, ஊரடங்கு உத்தரவு பயனற்றது என்பதையும் இவ்வாறான கட்டுப்பாடின்றி அனைத்து மக்களையும் மாவட்ட எல்லைகளைத் தாண்ட அனுமதிப்பது, கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இட்டுச் செல்லும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago
4 hours ago
4 hours ago