Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2020 நவம்பர் 08 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்வியங்காடு, கொட்டடி, குருநகர், நாவாந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடை உரிமையாளர்களால், இன்று (08) கடையடைப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்கள் 34 பேரே, இவ்வாறு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இன்றுக் காலை மாடு, ஆடுகளை வெட்டுவதற்கான கொல்களத்துக்;கு விளம்பர பலகை காண்பிக்கப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி பொலிஸாரால் குறித்த கொள்கலன் மூடப்பட்டது.
இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கு யாழ். மாநகர சபை தமக்குரிய நட்டஈட்டை வழங்க வேண்டும் எனவும் அத்தோடு குறித்த கொள்கலம் பிரச்சினை தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரியுமே, பாதிக்கப்பட்டோரால், இந்தக் கடையடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எமக்கு தீர்வு கிட்டாவிடின், திங்கட்கிழமை (09), ஆளுநரைச் சந்தித்து தமது பிரச்சினையை தெரியப்படுத்தவுள்ளதாகவும், இறைச்சிக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
9 hours ago
9 hours ago
27 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
9 hours ago
27 Aug 2025