2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இறுதி யுத்தத்தில் மூன்று மகன்களையும் காணவில்லை

Niroshini   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன 3 மகன்கள் தொடர்பிலும் எவ்வித தகவல்களும் இதுவரை இல்லை' என தாயாரான செல்வநாயகம் பாக்கியலக்சுமி, கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அமர்வில் சனிக்கிழமை சாட்சியமளித்தார்.

'எனது மகன்களான,  செல்வநாயகம் பத்மசீலன், வேலை செய்து கொண்டிருந்தார். செல்வநாயகம் தேவசீலன், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட 3ஆம் வருட மாணவன். செல்வநாயகம் குகசீலன், க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்.  

வன்னியில் வயல் நிலம் எமக்கு இருந்தமையால் அச்சுவேலியிலிருந்த நாம் நெற்செய்கைக்காக 2006ஆம் ஆண்டு வன்னிக்குச் சென்றோம். எனினும் ஏ-9 வீதி பூட்டப்பட்டமையால் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வர முடியவில்லை.

இந்நிலையில், இறுதி யுத்தத்தின்போது 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாவது மகனான செல்வநாயகம் குகசீலன் காணாமற்போனார். பின்னர் 2009ஆம் ஆண்டு மே மாதம் மற்றைய இரு மகன்களும் காணாமல் போயினர். இதுவரை அவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை' என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X