2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இளைஞன் மீது தாக்குதல்

எம். றொசாந்த்   / 2019 ஜூன் 13 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவகச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை கும்பல் ஒன்று தாக்கியதால், படுகாயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ் கண்டி நெடுஞ்சாலையில் நுணாவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை (11) இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைதடி கிழக்கை சேர்ந்த குறித்த இளைஞன் தனது வீட்டில் இருந்து, சாவகச்சேரி நகருக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு இருந்தவேளை வீதியில் மறித்த கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞனை வீதியில் சென்றோர் மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .