2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இளைஞரைக் காணவில்லை என முறைப்பாடு

Editorial   / 2017 ஜூலை 05 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இளைஞர் ஒருவரை, கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் காணவில்லை என, குறித்த இளைஞனின் தாயாரால், நேற்று (04), முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கிறேசியன் பிரேமிளன் (வயது 18) என்ற இளைஞரே, இவ்வாறு காணாமல் போயுள்ளார் என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“முழங்காவிலில் இருந்து யாழ். நாவாந்துறைப் பகுதிக்கு, மேசன் வேலைக்காக, கடந்த மாதம் 30ஆம் திகதி சென்ற இளைஞர் இதுவரை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் தொடர்பான தகவல்கள் தெரியவில்லை” என தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக,  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X