Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Gavitha / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஒழுங்குசெய்த வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களில் கடைமையாற்றுகின்ற இளைஞர் சேவை அதிகாரிகளுக்கான விளையாட்டு தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிப் பட்டறை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) ஆரம்பமாகியது.
இந்த பயிற்சிப் பட்டறை, இன்றும் திங்கட்கிழமையும் (14) இடம்பெற்று வருகின்றது.
இலங்கை மெய்வல்லுனர் சங்க பிரதிநிதிகள், வளவாளர்களாக கலந்துகொண்டு பயிற்சியளித்து வருகின்ற இந்த பயிற்சிப் பட்டறையில், 40க்கும் அதிகமான இளைஞர் சேவை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்றைய ஆரம்ப நிகழ்வில், வடமாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பயிற்சிப் பிரிவு இயக்குநர் ரோசினி ரத்ணாயக்க மற்றும் பயிற்சிப் பிரிவு உதவி இயக்குநர் மனுல சமல் பெரேரா, விளையாட்டுப் பிரிவு உதவிப் பணிப்பாளர் சமன் அபேவர்த்தன, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வடமாகாண பணிப்பாளர் சரத் சந்திரபால, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம் முனவ்வர், கடற்படை கட்டளை அதிகாரி கொமாண்டர் ஆர். எஸ். திசாநாயக்க மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago