2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

இ.போ.ச சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

Gavitha   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன், எஸ்.திருச்செந்தூரன், எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடமாகாணதிலுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள், இன்று வியாழக்கிழமை காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் தொடர்ச்சியாக தாக்கப்படுவதை கண்டித்தும், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும், வவுனியா பழைய பஸ் நிலையத்தில் இருந்தே வழமை போன்று இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகள் இடம்பெற வேண்டும்  தெரிவித்தும் இவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகளுக்கும், தனியார் பஸ் சாரதிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக முரண்பாடுகளும் கைகலப்புகளும் இடம்பெறுவதுடன், வவுனியாவில்  புதிதாக திறந்து வைக்கப்பட்ட பஸ் நிலையத்தில், புதன்கிழமை இடம்பெற்ற கைகலப்பில், இ.போ.ச பஸ் சாரதி படுகாயடைந்து, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மன்னார்  டிப்போ சாரதிகளின் பணிப்புறக்கணிப்பில் இன்று ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X