2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிப்பு

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஜூலை 06 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மயிலிட்டி உயர் பாதுகாப்பு வலய பகுதியில் உள்ள தனது காணியை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவரை, நேற்று (05) இரவு கைது செய்த காங்கேசன்துறை பொலிஸார், இன்று (06) காலை விடுவித்துள்ளனர்.

மயிலிட்டியை பூர்வீகமாகக் கொண்ட சின்னத்தம்பி யோகனந்தகுரு என்ற நபரே, கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவில் தற்போது வசித்து வரும் குறித்த நபர், மயிலிட்டியில் 54 ஏக்கர் காணி, கடந்த திங்கட்கிழமை (03) விடுவிக்கப்பட்டதையடுத்து, தன்னுடைய காணியை பார்க்க முல்லைத்தீவில் இருந்து வந்துள்ளார்.

எனினும், தற்போதும் தனது காணி, உயர் பாதுகாப்பு வலயத்துள் உள்ளதைக் கண்டு, தனது காணியையும் விடுவிக்குமாறு கோரி நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, குறித்த நபரைக் கைது செய்த காங்கேசன்துறை பொலிஸார், இன்று காலை விடுவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X