2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.மருதனார்மடத்தில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுவர் வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் யாழ்.சுன்னாகத்தைச் சேர்ந்த நாகேந்திரம் சுபாதர்சன் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அண்மைக்காலமாக இந்து சமயத்துக்கும், இந்துக்களுக்கும் எதிராக அதிகரித்து வரும் தொடர் வன்முறைகளைக் கண்டித்து கடந்த சனிக்கிழமை (06) யாழ்.மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பியவர், வீட்டில் குளித்துவிட்டு தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி நிலத்தில் விழுந்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அகில இலங்கை இந்து மகாசபாவின் சுன்னாகம் ஒருங்கிணைப்பாளராகவும் விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X