Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 07 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்கவேண்டியும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும்ப் யாழ்ப்பாண பஸ் நிலையத்துக்கு முன்னால் மாபெரும் போராட்டம் நாளை மறுதினம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை மறுதினம் காலை ஒன்பது மணிமுதல் 12 மணிவரை நடைபெறவுள்ள குறித்த போராட்டத்தில் சகலரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்பாட்டில், யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் அரசியல் கைதிகளின் விடயம் குறித்து விசேட கலந்துரையாடலொன்று இன்று நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில், அரசியல் கட்சிகள், யாழில் செயற்படும் பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். கலந்துரையாடலின் பின்னர், மேற்கூறப்பட்ட போராட்டத்தை மேற்கொள்வதென முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தும் அமைப்பின் அமைப்பாளர் அருட்தந்தை மா. சக்திவேல் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கலந்துரையாடலின்போது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் மற்றும் அவர்களின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேசப்பட்டதாகவும் இதன் முதற்கட்டமாக, சகலரையும் இணைத்து, நாளை மறுதினம் காலை ஒன்பது மணி தொடக்கம் 12 மணிவரை யாழ் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் மா. சக்திவேல் கேட்டுகொண்டார்.
இதேவேளை, நியாயமான குறித்த கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்க வேண்டுமென்றும் இல்லையேல் இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் மா. சக்திவேல் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago