2025 மே 08, வியாழக்கிழமை

’உண்ணி காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவை’

Niroshini   / 2020 நவம்பர் 09 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

உண்ணி காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவையென, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்.

தற்பொழுது பரவிவரும் உண்ணி காய்ச்சல் நோய் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தற்பொழுது  கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இக்காலத்தில், தமது பிரதேசத்தில் காய்ச்சல் காரணமாக பலர் சிகிச்சைக்கு வருகிறார்களென்றார்.

இந்தக் காய்ச்சல் உண்ணி காய்ச்சல் என்ற ஒரு பக்றீரியா காய்ச்சலெனத் தெரிவித்த அவர், அடுத்ததாக எலிக் காய்ச்சல் காணப்படுகின்றதெனவும் காசநோய்க்குரிய காய்ச்சலும்  காணப்படுகின்றதெனவும் கூறினார்.

எனவே, இந்தக் காய்ச்சல் ஏற்பட்டால், உடனடியாக வைத்தியரை அணுக வேண்டுமெனத் தெரிவித்த அவர், பருவகாலங்கள் ஆரம்பிக்கும்போது, உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்குமெனவும் கூறினார்.

அதாவது வயல் வேலை செய்பவர்கள் தோட்ட வேலை செய்பவர்களே, இந்த உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்களெனத் தெரிவித்த அவர், அடுத்ததாக அறுவடைக் காலங்களிலும் அதிகளவானோர் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனரெனவும் கூறினார்.

இந்தக் காய்ச்சல், தௌ;ளினால் பரப்பப்படுகின்றதெனவும் பொதுவாக இநத்த் தௌ;ளிகள் எலி, அணில், நாய், பூனை உள்ளிட்ட மிருகங்களில் காணப்படலாமெனவும், யமுனாநந்தா கூறினார்.

'மிருகங்களோடு பழகுபவர்களுக்கு, இந்தத் தொற்று ஏற்படுவது சாதாரணமாகும். அத்தோடு, உடலில் தௌ;ளு கடித்த காயம் ஏற்படுமாயின் அந்தக் காயத்தின் ஊடாகவே இந்த கிருமி உடலுக்குள் செல்கின்றது. இவற்றை அடையாளம் காணத் தவறும் பட்சத்தில், நோய் கடுமையாகி சில வேளைகளில் உயிரிழப்பும் ஏற்படலாம்' எனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X