2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

உண்ணாவிரத போராட்டத்தில் கருத்து முரண்பாடு

George   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில்  முரண்பாடு ஏற்பட்டது.

புதன்கிழமை (28) காலை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள், வடமாகாண ஆளுநர் அலுவலத்தின் மூன்று கதவினையும் பூட்டி உண்ணாவிரத போராட்டத்தினை  முன்னெடுத்தார்கள்.

அதன்போது, ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவனுக்கும், தொண்டர் ஆசிரியர்களுக்கும் இடையில் சிறு கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

அதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், “அலுவலகத்தின் கதவினை மூட முடியாது, எனினும், நீங்கள் உங்களின் உண்ணாவிரத்தினை முன்னெடுக்க முடியும்” கூறினர். பொலிஸாருடன் 30 நிமிடங்கள் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து ஆசிரியர்கள் கதவினை திறந்து விட்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X