Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், டி.விஜித்தா
மாற்றுத் தலைமை தேவை என்ற அடிப்படையில், புதிய தலைமையின் கீழ், தமிழ்க் கட்சிகள் அடங்கிய புதிய கூட்டணி, இன்று உருவாகியது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில், எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான உடன்படிக்கையும், இப்புதிய கூட்டணயினால் இன்று பிற்பகல் 2 மணிக்கு கைச்சாத்திட்டது.
வீ.ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, சரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப், தமிழரசுக் கட்சியின் முன்னாள் இளைஞர் அணித்தலைவர் சிவகரன் தலைமையிலான ஜனநாயக தமிழ் அரசுக் கட்சி, ஈரோஸ், திருகோணமலையைத் தளமாகக் கொண்டு இயங்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் மற்றும் 3 பொது அமைப்புக்கள் இணைந்து, இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில், இன்று (06) காலை, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோவைச் சேர்ந்த என்.கே.சிவாஜிலிங்கம் உட்பட பலர், மூத்த அரசியல்வாதியும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான வீ.ஆனந்த சங்கரியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
1 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025