Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 21 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரொமேஸ் மதுசங்க
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை வரை பயணித்தில் ஈடுபட்டிருந்த உத்தரதேவி ரயில் மீது, நேற்று (20) இரவு, சுன்னாகம் பிரதேசத்தில் வைத்து கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரவு 7.30 மணியளவில், இந்தக் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த சுன்னாகம் பொலிஸார், சுன்னாகம் ரயில் நிலையத்திலிருந்து 500 மீற்றர் தொலைவில் வைத்தே, இந்தக் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.
இந்தக் கல்வீச்சு இடம்பெற்ற சந்தர்ப்பத்தின்போது, அப்பகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், எவரும் கைது செய்யப்படவில்லை என, பொலிஸார் கூறினர்.
எவ்வாறாயினும், இந்தக் கல்வீச்சுத் தாக்குதலால், ரயிலில் பயணித்த பயணிகள் எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட பொலிஸார், ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சிலவே உடைந்து சேதமாகியுள்ளன என்றும் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago