Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 மே 03 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.குகன்
யாழ். மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக வருமானம் குறைந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் புலமைப்பரிசில்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தகைமைகளாக முழுநேர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் பெற்றோரில் ஒருவராவது யாழ் மாவட்டத்திலுள்ள ஏதாவது ஒரு கமக்காரர் அமைப்பில் உறுப்பினராகவும் இருத்தல் வேண்டும். அத்துடன் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கா.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியெய்தி 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவராக இருத்தல் வேண்டும்.
மேற்கூறிய தகைமையுடைய விண்ணப்பதாரிகள் தமது எல்லைக்குட்பட்ட கமலநல சேவை நிலையத்தில் விண்ணப்பபடிவத்தைப் பெற்று தத்தமது கமக்கார அமைப்பின் சிபாரிசுடன் உரிய கமநல சேவை நிலைய, கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் தமது சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை விண்ணப்பதாரிகள் கல்வி கற்கும் பாடசாலை அதிபரின் சிபாரிசு, குறித்த கிராம சேவையாளரின் சிபாரிசு கடிதங்களுடன் எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்பு கிடைக்கக்கூடியவாறு நேரடியாகவே அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும் மேற்படி திட்டத்தில் குடும்ப வருமானம், பிள்ளையின் கல்வித்தரம், மீள் குடியமர்வு என்பன கருத்தில் எடுக்கப்பட்டு கமலநல சேவைகள் நிலைய பிரிவு மட்டத்தில் தெரிவு இடம்பெறும் எனவும் கமலநலஅபிவிருத்தித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago