2025 மே 13, செவ்வாய்க்கிழமை

உயிர்நீத்த இளைஞனுக்கு துக்கம் அனுஷ்டிப்பு

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

 

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று உயிர்நீத்த இளைஞனுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, இன்று (04) அப்பகுதி மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாது, துக்கம் அனுஷ்டித்ததுடன், கடற்றொழில் சங்கத்தின் கொடியையும் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

பாசையூர் கடற்றொழிலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், உயிர் நீத்த சக தொழிலாளருக்காக, அனைத்து தொழிலாளர்களும், தொழிலுக்குச் செல்லாது, சோக கீதம் இசைக்கவிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

யாழ்ப்பாணம் - பாசையூர் கடலில், சக மீனவர்களுடன், நேற்று (03) மீன்பிடிக்கச் சென்ற பாசையூர் பகுதியைச் சேர்ந்த சில்வெஸ்ரர் சஜித் (27) என்ற இளைஞன், பூம்புகார் கடற்பகுதியில் சடலமாக கரையொதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X