2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Niroshini   / 2016 ஜூன் 07 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நெடுந்தீவு 2ஆம் வட்டார கடற்பரப்பில், உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று திங்கட்கிழமை (06) கரையொதுங்கியுள்ளதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

கரையொதுங்கிய சடலம் அடையாளம் காணமுடியாதவாறு உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீல நிற சாரம், சிவப்பு நிற ரீசெட் அணிந்த நிலையில் கரையொதுங்கியுள்ள இந்தச் சடலம், சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவராக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.  

இது இந்திய மீனவருடைய சடலமா? அல்லது இலங்கை மீனவருடைய சடலமா? என்பது தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X