2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

உலக உணவுத்திட்ட இலங்கை பணிப்பாளர் வளலாய்க்கு விஜயம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

அண்மையில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளலாய்ப் பகுதிக்கு, உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் இஸ்மால் ஓமர் புதன்கிழமை (30) விஜயம் செய்து, மீள்குடியேறிய மக்களின் நிலைமைகளை கேட்டறிந்தார்.  

மீள்குடியேற்றப்பட்டு, 7 மாதங்கள் ஆகின்ற போதும் இதுவரையில் தங்களுக்கு வீட்டுத்திட்டம் தரப்படவில்லையெனவும்  கொட்டகைகளில் வசித்து வருவதாகவும் மக்கள் கூறினர். மின்சார இணைப்பு பணிகள் முடிவடைந்த போதும் மின்சாரம் வழங்கப்படவில்லையென மக்கள் அவருக்கு எடுத்துக்கூறினர்.

இப்பகுதியில் குடும்ப அங்கத்தவர்களில் அதிகமானோர் சிறுவர்களாக இருப்பதானால், முன்பள்ளியொன்றை அமைத்து தருமாறும் சிறுவர்களுக்கு பேசாக்கு உணவுகளை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலகத்தினனூடாக பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த இஸ்மால் ஓமர், முன்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இங்குள்ள சிறுவர்களுக்கு போசாக்கு உலர்உணவு பொருட்கள் வழங்கப்படும் என்றார்.

அத்துடன், உலக உணவுத்திட்டத்தினூடாக இப்பகுதி மக்களுக்கு உலர்உணவுத்திட்ட முத்திரைகளை மாவட்ட செயலகத்தினூடாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

'இப்பகுதியில் 333 குடும்பங்கள் மீள்குடியேற பதிவு செய்துள்ளனர். ஆனால், தற்போது 64 குடும்பங்களே மீள்குடியேறி வசித்து வருகின்றனர். இங்கு மீள்குடியேறிய மக்களில் 48 குடும்பங்களுக்கு 45 நாட்களுக்கான உலக உணவுத்திட்ட முத்திரை வழங்கப்பட்டுள்ளது' என்று அங்கு பிரசன்னமாகியிருந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலர் ம.பிரதீபன் ஒமாவுக்குச் சுட்டிக்காட்டினார்.  

உணவு முத்திரை கிடைக்காத ஏனைய குடும்பங்களுக்கு இனிவரும் நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .