Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Princiya Dixci / 2022 செப்டெம்பர் 13 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தால் வருடாந்தம் நடத்தப்படும் உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு, கிளிநொச்சி - அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள விவசாயபீட மாநாட்டு மண்டபத்தில் நாளை புதன்கிழமை (14) நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாயபீடம், வடக்கு - கிழக்கை மையப்படுத்தி உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு ஒன்றை 2015ஆம் ஆண்டு முதல் வருடம் தோறும் நடத்தி வருகிறது. அந்த வரிசையில், அதன் எட்டாவது மாநாடே நாளை நடைபெறவுள்ளது.
“உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்காக வளர்ந்து வரும் பொருத்தமான விவசாயத் தொழில்நுட்பங்கள்” என்ற தொனிப் பொருளில் நடைபெறவுள்ள இந்த ஆய்வு மாநாட்டில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.
ஜப்பான் கய்சு பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் ஒகடா கைசு ஜப்பானில் இருந்து வருகை தந்து பிரதான பேச்சாளராக் கலந்து கொள்ளவிருப்பதோடு, “ஜப்பானின் ஸ்மார்ட் விவசாயம் : ஒரு பார்வையும் அதன் போக்கும”எனும் தலைப்பில் முதன்மைப் பேருரையும் ஆற்றவுள்ளார்.
மேலும், இவ்வாய்வு மாநாட்டில் இலங்கை மற்றும் சர்வதேச ஆய்வாளர்களால் பயிராக்கவியல், விவசாய உயிரியல், விலங்கு விஞ்ஞானம், மண், சூழல் மற்றும் பொறியியல் விஞ்ஞானம், உணவு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், நீர், பொருளாதாரம் மற்றும் அறிவூட்டல் ஆகிய உப தொனிப்பொருள்களில் 48 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
50 minute ago
2 hours ago
3 hours ago