Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 09 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவுடன் சேர்த்து சில பிரிவுகள் மாத்திரமே வினைத்திறனுடன் செயற்படுவதாகவும் மாவட்டச் செயலக விளையாட்டுப் பிரிவு மற்றும் சமய கலாசாரப் பிரிவு என்பன படுமோசமான செயற்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும், மாவட்டச் செயலகத்தின் வினைத்திறன் தொடர்பில் மதிப்பீடு செய்யும், செயற்றிறன் முகாமைத்துவ விளக்கப்படத்தின் மூலம் அறியமுடிகிறது.
ஜப்பானின் 5 எஸ் முறையை பின்பற்றியமை, உற்பத்தித்திறனை செயற்படுத்தல், கோவை முகாமைத்துவம், குழுச் செயற்பாடு, மொத்தச் செயற்றிறன் ஆகிய தனித்தனியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, இந்த விளக்கப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மிகச்சிறப்பாக இருந்தால் சிவப்பு புள்ளியும், சிறப்பாக இருந்தால் பச்சை புள்ளியும், திருப்திகரமாக இருந்தால் மஞ்சள் புள்ளியும், படுமோசமாக இருந்தால் கறுப்பு புள்ளிகளும் வழங்கப்படும்.
உள்ளக கணக்காய்வு பிரிவு 4 சிவப்பு புள்ளிகளையும், 1 பச்சைப் புள்ளியையும் பெற்றும் சிறந்த பிரிவாகவுள்ளது. அதற்கு அடுத்ததாக கணக்குப் பிரிவு 2 சிவப்பு, 3 பச்சை புள்ளிகளைப் பெற்று இரண்டாவது நிலையிலும், நிர்வாகப் பிரிவு மற்றும் விரிவாக்கற்பிரிவு ஆகியன மூன்றாமிடத்திலும் உள்ளன. மோசமான பிரிவாக, விளையாட்டு பிரிவும் கலாசார பிரிவும் காணப்படுகின்றன. இவை இரண்டு 4 கறுப்புப் புள்ளிகளையும், 1 மஞ்சள் புள்ளியையும் பெற்றுள்ளன. ஜப்பானிய 5 எஸ் முறையை பின்பற்றுதல் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் பல பிரிவுகள் கோட்டைவிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
41 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
54 minute ago