2025 மே 19, திங்கட்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்

Editorial   / 2018 நவம்பர் 27 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக வல்வெட்டித்துறைக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள்; அவர் பிறந்த வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்திலும்; ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

அது தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்டனர். குறிப்பாக அங்கு நின்ற ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுத்ததுடன், வாகனங்களின் இலக்கங்களையும் புகைப்படம் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X