Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜிதா
சாவகச்சேரி நகர் பகுதியில், முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் ஊடகவியளாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இச்சம்பவம், சாவகச்சேரி - தனங்களப்பு வீதியில், நேற்று (02) மாலை 06.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய சேவையான யாழ். எப்.எம்-இல் கடமையாற்றும் சாவகச்சேரியைச் சேர்ந்த ஊடகவியளாளர் ஒருவரே, இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர், வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது,முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் அவரது வாகனத்தை மறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் மதுபோதையில் இருந்ததாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தாக்குதல் சம்பவத்தின் போது அங்கிருந்த பள்ளி வாசலில் தொழுகை முடித்து விட்டு வெளியே வந்த இருவர், ஊடகவியாளரைப் பாதுகாக்க முற்பட்ட போது, அவர்கள் மீதும் பியர் மதுபோத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலை மேற்கொண்டவர்கள், அரசியல் ஆதிக்கம் உள்ள நபர் ஒருவரின் பெயரை அத்தருணத்தில் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது
சம்பவம் தொடர்பாக, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025