2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

ஊரடங்கில் வாள்வெட்டு: மூவர் படுகாயம்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 22 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ். நிதர்ஷன், டி. விஜித்தா
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து மூவர் மீது சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று, யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணம் - குருநகர் கடற்கரை வீதியில், திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அண்மையில், இன்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்றில், மூவர் பயணித்த நிலையில், அவர்களை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் துரத்தி வந்த நால்வர் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த மூவரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களினால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


கமி என்றழைக்கப்படும் இந்த குழுவினரே இந்த வாள்வெட்டை மேற்கொண்டுள்ளனர் எனவும் யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியைச் சேர்ந்த மூவர் மீதே வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கமி குழுவினருக்கும், இவர்களுக்கும் இருந்த பகை காரணமாகவே வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகின்றது.

வாள்வெட்டுக்கு இலக்கான ஒருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குருநகர் பொலிஸ் காவலரணுக்கு தகவலளிக்கப்பட்ட போதும், சுமார் ஒரு மணிநேரமாக பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை என்று, அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு பொலிஸாரும் முப்படையினரும் வீதிச் சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டுள்ள வேளையில், வன்முறைக் கும்பல் இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .