2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

ஊறணி பாடசாலைக் காணி விடுவிப்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வலிகாமம் வடக்கு இராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தில் இருந்த ஊறணி பாடசாலைக் காணி, இன்று (04) விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27 வருடங்களாக படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த ஊறணியில் சில பகுதியளவிலான இடங்கள் விடுவிக்கப்பட்டமையை அடுத்து, அங்கு மக்கள் மீளக்குடியமர்ந்து வருகின்றனர்.

இவ்வாறு குடியமர்ந்துள்ள மக்கள், படையினரின் வசமிருக்கும் ஊறணி கனிஸ்ட வித்தியாலயத்தை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கமைய, படையினர் இப்பாடசாலை அமைந்துள்ள 3.9 பரப்புக் காணியை விடுவித்தனர். இக்காணிகளை, யாழ். மாவட்டச் மேலதிக அரச அதிபர் எஸ்.முரளிதரனிடம் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி தர்ஷன கெட்டியாராச்சி, கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X