Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 ஒக்டோபர் 11 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
"எனது மகன் எனக்கு வேண்டாம்" என தாய் ஒருவர் கடிதம் எழுதி தனது மகனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அவரது மகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் தாயொருவர் தனது 15 வயது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளமையால், மகனை தன்னால் பராமரிக்க முடியவில்லை என கூறி " எனது மகன் எனக்கு வேண்டாம்" என தனது கைப்பட கடிதம் எழுதி பொலிஸாரிடம் வழங்கி , தனது மகனையும் பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.
அதனை அடுத்து பொலிஸாரினால் குறித்த சிறுவன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , சிறுவனை அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு மன்று உத்தரவிட்டதற்கு அமைய சிறுவன் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago
37 minute ago
37 minute ago