2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

எரிபொருளுக்கு குவிந்ததால் ஊரடங்கில் அமைதியின்மை

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 03 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நகரத்தின் பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், டிப்பர் வாகன சாரதிகளுக்கு, இன்று (03)  காலை மண்ணெண்ணெய் வழங்கியதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பங்கீட்டு அட்டைக்கான மண்ணெண்ணெய்யை வழங்காது, சுமார்  நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் வாகன  சாரதிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன்,  சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அத்தியாவசிய சேவைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மாவட்டச் செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற  கூட்டத்தில், உடனடித் தேவைகளுக்காக பங்கீட்டு அடிப்படையில் பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கும் படி அறிவிக்கப்பட்டிருந்தது.   

இருந்தபோதும், எரிபொருள் நிலையங்களில் அவ்வாறு  வழங்காது, டிப்பர் வாகன சாரதிகளுக்கு பெரும் தொகையில் எரிபொருளை  வழங்கி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தங்களுக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் தாம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற அதேவேளை, சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்கு அதிகளவில்  மண்ணெண்ணெய் மற்றும் டீசல் வழங்கப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .