2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

எல்லைமீறிய புத்தளம் 9 மீனவர்கள் 9 பேர் கைது கைது

George   / 2016 மே 30 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அனுமதிப்பத்திரத்தில் வழங்கப்பட்ட எல்லையை மீறி, வெற்றிலைக் கேணி கடற்பரப்பில் கடலட்டைத் தொழிலில் ஈடுபட்ட 9 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம், கற்பிட்டியைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு திங்கட்கிழமை (30) அதிகாலை கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர் பா.றமேஸ்கண்ணா கூறினார்.

வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் நுழைந்து மூன்று படகுகளில் கடலட்டை பிடிப்பில் ஈடுபட்ட இந்த மீனவர்களிடம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் விசாரணை செய்த போது, முல்லைத்தீவு கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதி மாத்திரம் வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்தது. 

இதனையடுத்து, 9 மீனவர்களையும் கைது செய்த கடற்படையினர், அவர்களின் உபகரணங்களையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து, மீனவர்களும், உபகரணங்களும் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X