2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘எவருக்கு எதிராகவும் போராடவில்லை’

Editorial   / 2017 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

 

“நாங்கள், எங்கள் வாழ்வாதாரத்துக்காகப் போராடுகின்றோமே தவிர, வேறு எவருக்கு எதிராகவும் போராடவில்லை” என, கடந்த 113 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளிநொச்சி இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

“தங்களது பூர்வீக நிலமான இரணைதீவில் சென்று தங்களது வாழ்வாதாரத்தொழிலான கடற்றொழிலைச் செய்து, வாழ்வதற்கான உரிமையை இந்த நல்லாட்சி அரசாங்கம் வழங்க வேண்டுமெனக்கோரி, கடந்த மே மாதம் முதல் கடந்த 113 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். 

“தாங்கள் வாழ்ந்த இரணைதீவில், பெண்களும் ஆண்களும் தொழில் செய்யக்கூடிய ஒரு பரவைக்கடல் பகுதியாகும். தற்போது நாங்கள் தங்கியிருக்கின்ற முழங்காவில் இரணைமாதா நகரில் எந்த வசதிகளுமில்லை. 

“தங்களது நிலத்துக்குச் சென்று எமது வாழ்வாதாரத் தொழிலைச் செய்து வாழ்வதற்கான உரிமைகளை வழங்க வேண்டும். இதற்காகவே நாங்கள் இத்தனை நாட்களாகப் போராடுகின்றோம். 

இரணைதீவைச் சேர்ந்த 44இற்கும் மேற்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், இன்று எந்தத் தொழில்களுமின்றி மற்றவர்களின் கைகளை எதிர்பார்த்துள்ளன. எங்கள் நிலத்துக்கு விட்டால், அங்கு நாங்கள் நிம்மதியாக ஏதோ உழைத்து வாழ்வோம். நாங்கள் அரசாங்கத்துக்கு எதிராகவோ, கடற்படைக்கு எதிராகவோ போராடவில்லை. எங்களது நிலத்தில் நாங்கள் சென்று வாழ்வதற்கும் எங்கள் கடலில் தொழில் செய்வதற்கும் தான் போராடுகின்றோம். 

“ஏனைய தீவுகள் போன்று இரணைதீவில் கடற்படையினரும் இருக்கலாம். நாங்கள் அதனை மறுக்கவில்லை. ஆகவே, நாங்கள் அங்கு வாழ்வதற்கும் தொழில் செய்வதற்கும் அனுமதிக்க வேண்டும்” என, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X