2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஐந்து சந்தி முடக்கம்

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

நீர்கொழும்பில், கொரோனோ வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இடம் முற்றுகையிடப்பட்டு, அவர் கலந்துகொண்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த ஐந்து சந்திப் பகுதியிலேயே, குறித்த நபர் தங்கியிருந்தார். இந்நிலையில், அந்தப் பகுதி முழுவதும் இன்று (31) காலை முதல் முற்றுகையிடப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அங்குள்ள பலரையும் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நீர்கொழும்பில், நேற்று (30) இரவு ஒருவர் உயிரிழந்திருந்தார். இவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயெ, இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .