Editorial / 2023 ஒக்டோபர் 31 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்
வவுனியாவில் இருந்து திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் சிலையொன்று பொலிஸாரினால் திங்கட்கிழமை (30) கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சிலையின் எடை 35 கிலோ கிராம் என தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் வைத்து இந்த சிலை கைப்பற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிலையை கடத்தி வந்தவர் தப்பி தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரே இந்ந நடவடிக்கை முன்னெடுத்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதிக்கு பொலிஸார் சென்ற போது அதனை கடத்தி வந்தவர் தப்பித்து சென்றுள்ளார். சிலை கைப்பற்றப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் கூறினர்.
30 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago