2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஐஸ் தொழிற்சாலைக்கு அருகில் இருந்து சடலம் மீட்பு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, சுப்பர்மடத்தில் உள்ள ஐஸ் தொழிற்சாலைக்கு அருகிலிருந்து,  இன்று (17) காலை, ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், கோப்பாய் பகுதியை சேர்ந்த வைரவ நாகரட்ணம் (வயது 78) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர், நேற்று (16) இரவு, அப்பகுதியில் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்ததாகவும், இந்நிலையில் இன்று காலை உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும், விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்டுள்ளமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வயோதிபரின் மகன் கரவெட்டி பகுதியில் வாழ்ந்துவருவதாகத் தெரிவித்த பொலிஸார், வழிதவறி சுப்பர்மடம் பகுதிக்கு சென்றிருக்காலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மற்றும் பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் ள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X