2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’ஐ.தே.க வந்தால் மாத்திரமே தீர்வு சாத்தியமாகும்’

Editorial   / 2020 ஜூலை 22 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி பீடமேறினால் மட்டுமே, தமிழ் மக்களுக்குரிய தீர்வு சாத்தியமாகுமென, ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

சாவகச்சேரியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், ஐ.தே. கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில்தான், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டதெனவும் அதுபோல, 2015ஆம் ஆண்டில், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலப்பகுதியில் தான், தமிழ் மக்களுக்கான அரசியல் யாப்பு உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டனவெனவும் கூறினார்.

எந்தவோர் ஆட்சி காலத்திலும், தமிழ் மக்களுக்கான தீர்வுகள் தொடர்பில் எந்த அரசாங்கமும் அக்கறை எடுக்காத நிலையில், ரணில் விக்கிரமசிங்க அவர்களின் காலத்தில் தான், தமிழ் மக்களுக்குரிய தீர்வுகள் முன்னெடுக்கப்பட்டனவெனத் தெரிவித்த அவர், எனினும் நாட்டில் ஏற்பட்ட சில குழப்பமான அரசியல் சூழ்நிலை காரணமாகவே, அனைத்தும் தடைப்பட்டதாகவும் கூறினார்.

“எனினும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி பீடமேறினால் தான், தமிழ் மக்களுக்குரிய தீர்வு கிடைக்கும்” எனவும் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X