2025 மே 15, வியாழக்கிழமை

ஒன்றுகூடல்

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந் 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், பல்கலைக்கழகப் பழைய மாணவர் சங்கத்தை மீளச் செயற்படுத்துவதற்கான ஒன்றுகூடல், பல்கலைக்கழக விஞ்ஞான பீட பௌதீகவியல் விரிவுரை மண்டபத்தில், நேற்று (21) முற்பகல் 10 மணிக்கு நடைபெற்றது.  

இதன்போது, எட்டுப் பேர் கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பழைய மாணவ சங்கத்தின் இடைக்கால நிர்வாகக் குழுத்தெரிவு இடம்பெற்றது. 

 தலைவராக எஸ்.தபோதரன், உப தலைவராக கே. ரஜீபன், செயலாளராக எஸ். ரவி, உப செயலாளராக ப.கங்காதரன், பொருளாளராக தி. இந்திரகுமார் உட்பட உறுப்பினர்களாக யாழ். தர்மினி பத்மநாதன், ஏ. அன்டன் சார்ள்ஸ், ரஞ்சித்குமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். 

 குறித்த இடைக்காலக் குழுவினர், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாகச் செயற்படாதிருந்த சங்கத்தின் நிர்வாகச் சட்டக் கோவையைச் சில மாற்றங்களுக்கு உட்படுத்துவதுடன், புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நண்பர்களையும் இச்சங்கத்தில் இணைக்கும் பணியையும் ஆரம்பித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .