Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 மார்ச் 15 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். றொசேரியன் லெம்பேட்
மன்னார்-மதவாச்சி பிரதான வீதிஇ சிறுநாவற்குளம் பகுதியில் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த வீதியூடாக மோட்டார் சைக்கிளில் மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதன்போதுஇ சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மற்றையவர், படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போது மரணமடைந்துவிட்டார்.
செட்டிகுளத்துக்கு மரணச் சடங்கொன்றுக்குச் சென்று விட்டு, மீண்டும் மன்னார் நோக்கி வீடு திரும்பிய போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மரணமடைந்த இருவரும், மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளை திருமணம் செய்த 36, 38 வயதுடைய இளைஞர்களாவர் எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .