Editorial / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவட்டபுரம் தெற்கு பகுதியில் உள்ள பாவனையற்ற மலசலகூட குழியில் இருந்து, ஒரு தொகுதி வெடி பொருட்கள் நேற்று (09) ஹலோ ரஸ் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, 90 வெடிக்காத நிலையில் இருந்த எறிகணை ஆர். பீ.ஜீ குண்டுகள், மோட்டார் குண்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
பாவனையற்ற மலசலகூட குழியைப் புனரமைப்பதற்காக வீட்டு உரிமையாளரால் அக்குழியில் தோண்டப்பட்டது. இதன்போது, சில வெடிப்பொருட்கள் காணப்பட்டதை அவதானித்த அங்கு துப்புரவுப்பணியில் ஈடுபட்டவர்கள், அது தொடர்பில் சொண்ட் நிறுவனத்துக்கு தகவல் வழங்கினர்.
இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த ஹலோ ரட்ஸ்ட் பணியாளர்கள், வெடிபொருட்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு 90 வெடிக்காத நிலையில் இருந்த எறிகளை ஆர். பீ.ஜீ குண்டுகள், மோட்டார் குண்களை அகற்றினர்.
அத்துடன், மேலும் அங்கு வெடி பொருட்கள் காணப்பட்டதால், நேற்று (10) வெடிபொருட்கள் அகற்றும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
5 minute ago
14 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
26 minute ago