ரொமேஷ் மதுஷங்க / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோத மின்சார வேலி அமைத்தல், யானை வெடி பயன்படுத்துதல் உள்ளிட்ட மனிதச் செயற்பாடுகள் காரணமாக, வட மாகாணத்தில் கடந்தாண்டு முதல் இது வரையான காலப்பகுதியில், 18 காட்டு யானைகள் கொல்லப்பட்டுள்ளனவென, வட மாகாண கால்நடை வைத்தியர் பீ.கிரிதரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வவுனியா – பூவரசன்குளம் பகுதியில் உள்ள காட்டில் இருந்து யானை குட்டியின் சடலமொன்று பிரதேசவாசிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யானைக்குட்டியின் வயது 3 எனத் தெரிவித்த அவர், இந்த யானைக் குட்டியின் உயிரிழப்புக்கு, சட்டவிரோத மின்சார வேலிகள் அமைத்திருந்தமையோ அல்லது வெடியைப் பயன்படுத்தியமையோ காரணமாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.
எனினும், அண்மையில் மனித நடவடிக்கைகளால் வட மாகாணத்தில் மனித செயற்பாடுகளால் அதிக எண்ணிக்கையிலான விலங்குகள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனவெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
47 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
6 hours ago
22 Dec 2025