Editorial / 2020 மார்ச் 11 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
வன்முறையுடன் தொடரப்பட்ட குற்றச்சாட்டில், கடந்த ஒரு வருடமாக யாழ்ப்பாணம் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர், இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர், யாழ்ப்பாணம் - மத்தியூஸ் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் என, யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம், மத்தியூஸ் வீதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து, பொருள்களை அடித்து உடைத்து சேதம் விளைவித்து, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான அழிவினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இவர் தேடப்பட்டு வந்துள்ளார் .
ஏற்கெனவே 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டார்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026