Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2022 ஜனவரி 27 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
தற்காலிகமாகவேனும் ஒரு தீர்வை எட்டவேண்டும் என்பதற்காக 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமெ ஓரணியாக தமிழ் தேசிய கட்சிகள் கையெழுத்திட்டு, இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
எனினும், அதனைக் குழப்புவதற்காக ஏதோவொரு திரை மறைவு அரசியல் நிகழ்சிக்கு பின்னால் நின்றுகொண்டு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயலாற்றுகின்றனர் என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று முன்தினம் (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த வினோ எம்.பி, “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் முக்கிய பங்கேற்ற தலைவர்களாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரே ஊடகவியலர்களுடன் நேருக்கமான உறவைக் கொண்டிருந்து, மிகப்பெரும் ஆலோசனை வழங்கி, ஒற்றுமைப் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
“இன்று பாரத பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் உட்பட கடந்த காலத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு எழுதிய கடிதம் உட்பட பலவற்றுக்கு தமிழ் தேசியக் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தி, அதன் மூலம் இன்றும் அந்த ஐக்கியத்தை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த முயற்சிகள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
“கடந்த அரசாங்கம் போலவே இந்த அரசாங்கமும் மீண்டும் மீண்டும் தமிழ் தேசியக் கட்சிகளை ஏமாற்ற முயற்சிக்கின்றது. இந்த நீண்ட பிறையோடிப்போயிருக்கின்ற அரசியல் தீர்வாக இருந்தாலும் அல்லது இனப் பிரச்சினைக்கான நீடித்து நிலைக்க கூடிய தீர்வாக இருந்தாலும் அதற்கு சர்வதேசத்தின் தலையீடு இல்லாமல் மஹிந்த - கோட்டா கூட்டுக் குடும்ப அரசாங்கம் எந்தத் தீர்வையும் வழங்காது.
“ஆகவே, நாம் ஒற்றுமைப்பட வேண்டும். இல்லாவிட்டால், எமக்கான தீர்வு எட்டாக்கனியாவே இருக்கும். அவ்வாறு ஒற்றுமையாக செயற்பட்டால்தான் எமது மக்களுக்கான தீர்வை பெற சர்வதேசத்தின் ஆதரவுடன் பயணிக்க முடியும். இல்லாவிட்டால் தொடர்ந்தும் நாம் ஒவ்வொரு விடயத்துக்கும் போராட வேண்டிய நிலைதான் ஏற்படும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago