Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 26 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
“மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்” என, மன்னார் மாவட்ட மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் வி.எஸ்.சிவகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் பெரிய பண்டிவிரிச்சான் மற்றும் ஆட்காட்டிவெளி ஆகிய இரண்டு மாவீரர் துயிலும் இல்லங்களிலும், மாவீரர் நாள் நினைவெழுச்சி நிகழ்வுகளுக்குரிய ஏற்பாடுகள் யாவும் நிறைவடைந்துள்ளன. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும், அவர் அழைப்பு விடுத்தார்.
“இதில், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளலாம். ஆனால், முக்கியத்துவம் வழங்கப்படமாட்டாது. ஆண்கள், பெண்கள் தமிழ் கலாசார உடை அணிந்து வருவது ஏற்புடையதாகும். மேலும், செல்பி எடுப்பதை தவிர்த்துக் கொள்ளவும். ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவும். தமிழீழ விடுதலைக்காக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களின் தியாக இருப்பிடம் என்பதை மனதில் நிலைநிறுத்தவும்.
“அத்துடன், மாவீரர்களின் பெற்றோர்களை, உறவினர்களை, மனரீதியாக சங்கடப்படுத்துகின்ற செயற்பாட்டில் எவரும் ஈடுபடவேண்டாம் என்பதனை தயவுடன் வேண்டுகின்றோம். போக்குவரத்துக்குரிய பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே, அனைவரையும் குறித்த நேரத்தில் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
2 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025