Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
ஓய்வூதியர்களுக்கான வயதெல்லை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஓய்வூதியர் தின நிகழ்வு, யாழ். மாவட்டச் செயலாளர் என்.வேதநாயகம் தலைமையில், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில், இன்று (08) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“ஓய்வுதியம் உரிமையா அல்லது சலுகையா என்பது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருக்கின்றது. இதனை முன்வைத்து ஒரு பட்டிமன்றமே நடத்தாலம் போன்று தென்படுகின்றது. இவ்வாறான நிலையில் சம்பளம் பெறுவது உரித்து. ஆனால் ஒய்வூதியம் பெறுவது சலுகை என்று ஒருவர் சொல்லிவிட்டார்.
“வரிச்சலுகையில் வாகனம் பெறுவது சலுகை அது உரித்து அல்ல என்ற சர்ச்சையில் இருந்து எழுந்த இன்னொரு சர்ச்சை இது. இது சம்பந்தமாக பொது வெளியிலே ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அதே போன்று ஓய்வு பெறுகிற வயது குறித்து எங்களுடைய நாட்டிலே மீளாய்வு நடைபெற்று வருகின்றது.
“நான் இரண்டு வகையான தொழில்களிலே ஈடுபட்டிருக்கின்றேன். அந்த இரண்டு தொழில்களிலேயும் ஓய்வு பெறுவதற்கு வயதெல்லை கிடையாது. சட்டத்தரணிகளுக்கு ஓய்வு வயது கிடையாது. எனது என்னுடைய இரண்டாவது தொழிலான அரசியலும் அரசியல்வாதிகளுக்கு ஓய்வு பெறுவதற்கான வயதெல்லை கிடையாது.
“ஆனால் அரச ஊழியர்களுக்கு அறுபதை எய்தியவுடன் ஓய்வு பெற வேண்டுமென்பது ஒரு நியதி. அவர்களுடைய அந்த வயதுக்குப் பிறகு மிகவும் திறம்பட பல துறைகளில் செயற்பட்டிருந்தாலும் கூட ஓய்வுதியம் பெற்றுக் கொண்டு வேலை செய்யாமல் இருக்கலாம். ஆனால் இந்த வயதெல்லை மிக விரைவிலே மாற்றியமைக்கப்படுமென நினைக்கிறேன்.
“ஓய்வு பெற்றவர்களை எப்படியாக ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்தலாம் என்று நினைத்து செயலாற்ற வேண்டிய தருணம் தான் இது. அதேபோன்று இன்னும் பல வகையில் ஆக்கபூர்வமான செயலாற்றல்களைக் கொண்டிருக்கின்றவர்களும் அதனைச் செய்யாமல் சமூகத்துக்கு அந்தத் தொண்டைக் கொடுக்க முடியாமல் இருப்பது துரதிர்ஸ்டவசமான நிலைப்பாடு.
“ஆகையால், வயதெல்லையை கூட்டுகின்ற அதே நேரத்தில், ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களை அவர்களது துறைகளிலே ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுவது நல்லது என்று நாங்கள் நினைக்கிறோம்” என்றார்.
33 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
2 hours ago