2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

Freelancer   / 2022 பெப்ரவரி 24 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

தெல்லிப்பழை - கட்டுவன் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று தெல்லிப்பழை பொலிசாரால் நேற்று  சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக கட்டுவன் பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த இடமே இவ்வாறு   முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது, கட்டுவனைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு 1,000 லிட்டர் கோடா, 40 லிட்டர் கசிப்பு மற்றும் உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X