2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு ஒழிப்பில் பெண்கள் அதிரடி

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி – பூநகரி, முக்கொம்பன் கிராமத்தில் இருந்து கசிப்பை ஒழிப்பதற்கு கிராம பெண்கள் ஒன்றிணைந்து நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

கசிப்பை கட்டுப்படுத்துமாறு, பூநகரி பொலிஸாரிடம் நேரில் சென்று பிரதேச பெண்கள் மனு கொடுத்த போது, பெட்ரோல் இல்லாததன் காரணமாக முக்கொம்பன் கிராமத்துக்கு தமக்கு வருகை தர முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, ஒன்றுதிரண்ட பெண்கள், கசிப்பு உற்பத்தி இடம்பெறும் பகுதிகளை சுற்றிவளைத்து, கசிப்பை கைப்பற்றியதுடன், உற்பத்தியில் ஈடுபட்டவர்களையும் மடக்கிப்பிடித்து பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அத்துடன், “கிராமத்தில் இருந்து கசிப்பை ஒழிப்போம்” எனும் வகையில் கிராமந்தோறும் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

கசிப்பினால் குடும்ப, சமூக வன்முறைகள் அதிகரித்ததன் காரணமாகவே கசிப்பை ஒழிப்பதற்கு தாம் ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாக பெண்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, முக்கொம்பன் கிராமத்துக்கு அண்மையில் வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனிடம் கிராமத்தில் இருந்து கசிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் வழங்குவதுடன், மாவட்டத்தின் பொலிஸ் உயரதிகாரிகளிடம் கிராம நிலவரம் தொடர்பாகவும் தெரிவிக்கும் படியும், கிராம மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X